Monday, June 8, 2009

மாதுளையின் மகத்துவம்


மாதுளம் பழச்சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசி ருசி உண்டாகும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், மாதுளஞ்சாறுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
அடிக்கடி மாதுளம்பழச்சாறு குடித்துவர மேனியை நன்கு பளபளப்பாக வைக்கும். சருமநோய்கள் வராது காக்கும்.
இச்சாறுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகினால் பித்தம் மொத்தமாக விலகும். கோடையில் ஏற்படும் நாவறட்சி, அதிக தாகம் தணிய மாதுளம் பழச்சாறு குடிக்கவும். உடலுக்கு நன்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும். மாதுளம் பழத்துடன், ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, மென்று தின்றால், குடல் கோளாறுகள் குணமாகும்.
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாதுளஞ்சாறு பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மாதுளம் பழச்சாறு குடித்து, ஒரு செவ்வாழைப் பழம் தின்று வர, ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். விந்து உற்பத்தியையும், மொபிலிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.
மாதுளைச் சாறுடன், வெங்காயச்சாறு, தேன் கலந்து குடித்துவர, சீதபேதி குணமாகும்.
மாதுளம் பழச்சாறுடன் சிறுது சீரகப் பொடியைச் சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர, கல்லீரல் கோளாறுகள் நீங்கி நலன் பயக்கும்.
திராட்சை சாறுடன், மாதுளம் பழச்சாறு சம அளவில் கலந்து குடித்து வர, இரத்த சோகை நோய் குணமாகி, இரத்த விருத்தி ஏற்படும்.
தசைகளை நன்கு இயங்கச் செய்யும் தன்மை, மாதுளம் பழத்திற்கு உண்டு என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
மாதுளம் பழத்தோலையும், நெல்பொரி, வெல்லம் இவைகளையும் சேர்த்து கஷாயம் செய்து பருகி வர, குண்டுடம்பு மெலிந்து, உடல்வாகு நடுநிலை அடையும். இது பக்கவிளைவில்லா இயற்கை மருந்தாகும்.
மாதுளம்பழ முத்துக்களை நன்கு மென்று தின்றால் விக்கல், வாந்தி விலகும்.
நெஞ்செரிச்சல், காதடைப்பு இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது மாதுளம் பழம்.
மாதுளை முத்துக்களை, விதையோடு நன்கு மென்று தின்றால், மலச்சிக்கலைப் போக்கும்.
மலத்துடன், இரத்தம் கசிவதை குணப்படுத்தும் தன்மை மாதுளஞ்சாற்றுக்கு உண்டு.
மாதுளஞ்சாறு பருகி வர, முதியோர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாதுளஞ்சாறுடன் ஆப்பிள்சாறு சேர்த்துப் பருகினால், மன இறுக்கம் குறையும்.
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், மாதுளம்பழச்சாறு குடித்துவர, சிறுநீர் நன்கு பிரியும்.