Wednesday, July 8, 2009

ஆரோக்கிய வாழ்விற்கு சிவப்பு வைன் (RED WINE)

நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. அவை காலநேர சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. பழையகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி புசித்த மனிதன், காலப்போக்கில் பயிரிட்டு கிடைக்கும் காய்கறி, பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். இன்றைக்கும் சில உணவுப் பழக்கங்களை நாம் மோசமானது என்று விலக்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றை எந்தக்காலத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்து தவிர்த்து விடுகின்றோம். ஆனால் அவற்றை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாப்பிடலாம் என்று டிக்' அடிக்கின்றனர்! உதாரணத்திற்கு இங்கே சில உணவுகளை கொடுத்துள்ளோம். அவற்றை எதற்காக சாப்பிடலாம் என்றும் காரணத்தை விளக்குகின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

சிவப்பு வைன்:(Red Wine)

பொதுவாகவே மது வகைகள் என்றால் அவை உடல் நலத்திற்கு கேடுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த விஷயத்திற்கும் விதிவிலக்கு ஒன்று இருக்குமல்லவா... அப்படித்தான் மதுவகைகளில் ஒன்றான சிவப்பு வைன் உடல் நலத்திற்கு நல்லது! உடல் நலத்திற்கு மட்டுமல்ல... மனசுக்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கபட்டுள்ளது.

சிவப்பு வைனில் பல நல்ல குணங்கள் அடங்கியுள்ளன என்று கூறுகிறது மருத்துவ சாஸ்திரம்.

நமது உடம்பில் உள்ள இரத்தக் குழாய்களை பாதுகாக்கும் குணமும் உண்டு. அதே போல் சிவப்பு வைனை சாப்பிட்டால் இதய நோய் தாக்கும் வாய்ப்பும் குறைவு. புற்று நோய் வரு வதை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏற்படுகிறது. ரெட் வைனை' சாப்பிடு வோருக்கு இதய நோய் வருவதில்லை. இதற்கு காரணம் சிவப்பு வைன் திராட்சை பழங்கள் மூலம் தயாரிக்கப் படுகிறது. திராட்சை பழத்தின் தோலில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்' என்ற மூலப்பொருள் இதயத்தை பாதுகாக்கும் விதத்தில் செயற்படுவதே இதற்கு காரணம். மேலும் சிவப்பு வைன் சாப்பிடுவோருக்கு மறதிநோய், ஈறு நோய் ஆகியவை கட்டுப்படுகிறது. குடல் புற்று நோயை தடுக்கும் ஆற்றலும் சிவப்பு வைனுக்கு உண்டு.

வாரத்தில் ஒருநாள் 3 கப் சாப்பிடலாம். இது உடலில் உள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்தும். ஆனால் சிவப்பு வைனில் இருக்கும் குணங்கள், வெள்ளை வைனில் இல்லை. மிதமாக பியர் சாப்பிடுவதால் இதயத்தின் செயற்பாடு அதிகரிப்பதாக, பல்வேறு நாடுகளில் நம்பிக்கை உள்ளது.

நெய்:

இதில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சத்து உள்ளதால் நெய் சாப்பிடக்கூடாது என்ற கருத்தும் நம்மிடம் உண்டு. வயதாகி விட்டாலோ, உடம்பு குண்டாக இருந்தாலோ நெய்யை தொடவே கூடாது என்று நினைத்துள்ளோம் நாம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?! ஆனால் அதுதான் உண்மை. ஆயுர்வேதத்தில் இருக்கும் பல மருந்துகளில் குறிப்பிடத்தக்க இடத்தில் நெய் உள்ளது. நெய்யை சாப்பிட்டால் குண்டாவோம் என்பதும் தவறு. நெய்யை உருக்கும்போது தண்ணீர் தன்மை வெளியேறி தங்க நிறத்தில் வரும்போது, அதை சாப்பிட்டால் மாமிசத்துக்கு நிகரான சுவையை ருசிக்க முடியும். நெய்யில் இருக்கும் பீட்டா கரோட்டீன், விற்றமின் ஈ போன்றவை மூளைக்கு மிகவும் நல்லது. குடலில் உள்ள சுகர் பகுதியை பலப்படுத்தும் தன்மை உடையது நெய்.குடலில் சுரக்கக் கூடிய அமிலங்களையும் கட்டுக்குள் வைக்கிறது.

பாக்டீரியா:

இந்த பெயரைக் கேட்டாலே... நாம் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்து நம்மை தாக்கும் ஒரு உயிரினமாக நினைக்கின்றோம். பாக்டீரியா என்றாலே நோய் பரப்பும் என்ற எண்ணமே நமக்கு வரும். ஆனால் உடலில் நல்லது செய்யும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனும் பாக்டீரியாவுக்கு உண்டு.

ஜீரண சக்தியை மேம்படுத்தவும், உடல் இயக்கம் இயல்பாக இருக்கவும் உதவும் ஈஸ்ட் கலந்த உணவுப் பொருட்களான தயிர் போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்களின் பங்கு தான் அதிகம்.

கோப்பி:(Coffee)

உலகம் முழுக்க அனைவரும் பருகுவது கோப்பியை... என்றாலும் அளவுக்கு அதிகமாகும்போது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதில் உள்ள காபின் என்ற மூலப் பொருளே உடலை பாதிக்கும். ஆனால் அளவோடு கோப் பியை பருகினால் நீரழிவு நோய் ஓரளவு கட்டுப்படும். குறிப்பாக பெண்களுக்கு காபின் நல்லது. தினமும் 3, 4 கப் கோப்பி பருகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தசைகளில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தும் சக்தி கோப்பிக்கு உண்டு. குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் கோப்பிக்கு உண்டு.
நன்றி-mangayarkesari