Wednesday, November 5, 2008

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை

டயாபடிஸ் (Diabetes) அல்லது சர்க்கரை நோய் என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம்.

பொதுவாக `வருமுன் காக்க' என்ற வாக்கின்படி, எந்தவொரு நோயும் வருவதற்கு முன் தற்காப்பாக இருந்து கொள்வதே சிறந்தது. ஒருவேளை நோய் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்டால், பதற்றப்படாமல், அதற்குரிய சிகிச்சையை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயும் அதேபோலத்தான். வீட்டில் தாய்-தந்தைக்கோ அல்லது மூதாதயர்களுக்கோ சர்க்கரை நோய் இருப்பின், அடுத்த சந்ததியினருக்கும் சர்க்கரை நோய் வரும் என்பது நியதி என்றாலும், அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை.

ஒரு வீட்டில் தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்து, அவரின் 2 மகன்களில் ஒருவருக்கு அதே பாதிப்பு இருக்கக்கூடும். அல்லது 2 பேருக்குமே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குறிப்பிட்ட வயதிலிருந்தே அதாவது, 20 வயது வாலிபப் பருவம் முதலே உரிய உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.

அதாவது கட்டுப்பாடின்றி இருப்பவர்களுக்கு 40 - 45 வயதில் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்பட்டால், முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்போருக்கு அதனை சுமார் 55 வயது வரையிலும் தள்ளிப்போடலாம். எனவே பரம்பரை சர்க்கரை வியாதியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் உழைப்பு இல்லாமையே முழுமுதற் காரணம் என்றால் மிகையில்லை.

பல மணி நேரம் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பணியாற்றுவது, கணினி முன் அமர்ந்து ஏதாவது எண்ணெயில் வறுத்த சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்தல், அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் மிகக் குறைந்த வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

பரம்பரையாக தந்தை, தாய்க்கு சர்க்கரை நோய் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு சர்க்கரை நோய் வருவதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், பரபரப்பான உலகில் ஒரு சில குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சிலருக்கு சிறு வயதிலேயே அதாவது 20-25 வயதிற்கெல்லாம் டயாபடிஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். எனவே சர்க்கரை நோய்க்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை.

சர்க்கரை நோயாளியான பின் என்ன சாப்பிடலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

சர்க்கரை நோய் என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடனேயே தினமும் `வாக்கிங்' செல்வதை வழக்கப்படுத்த வேண்டும். கூடுமானவரை அதிகாலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பானது சக்தியாக எரியப்பட்டு, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

சர்க்கரை நோயால் உருவாகக்கூடிய பின் விளைவுகளைத் தவிர்க்க `வாக்கிங்' மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

பொதுவாக வாழைப்பழங்கள் அஜீரணத்தை குறைத்து உடலின் கழிவுகள் வெளியேற வழிவகுக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது. என்றாலும் டாக்டரின் பரிந்துரைப்படி தேவைப்பட்டால் வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

பழங்களைப் பொறுத்தவரை கொய்யாப்பழம், பேரிக்காய் ஆகியவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றவை.

அரிசி சோறு 3 வேளையும் உண்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மதியம் ஒருவேளை குறைவான அளவு அரிசி சோற்றுடன் அதிகளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளும் பொறித்தவற்றை விடவும் வேகவைத்ததாக இருத்தல் சிறந்தது.

மற்ற இருவேளைகளிலும் சப்பாத்தி போன்ற கோதுமையினால் தயாரித்த உணவோ அல்லது கேழ்வரகு கஞ்சி போன்றவையோ சாப்பிடுதல் அவசியம். இதே போன்ற கட்டுப்பாடான, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையைக் கடைபிடித்து அவ்வப்போது உரிய பரிசோதனைகளையும் செய்து வரும் சர்க்கரை நோயாளிகள் வேறு எந்த விளைவுகளைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை.

1 comment:

Anonymous said...

Merkur Solingen merkur 500c - XN Forums
I'm looking for an official Merkur replacement for me. 바카라 Merkur 제왕 카지노 Solingen merkur 500c - Solingen, Germany, 2020, 메리트 카지노 고객센터 2020.